தளபதி விஜய் நடிப்பில் 2002-ம் வருடம் வெளியாகிய “தமிழன்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதையடுத்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் சிறுத்தை சிவா டைரக்டில் அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் படத்திற்காக டி.இமான் தேசிய விருதும் பெற்றார்.

தற்போது இவர் கைவசம் வள்ளி மயில், மலை ஆகிய படங்கள் இருக்கிறது. இதனிடையே டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார். அதன்படி, சேலம் கல்பாறைப்பட்டி செவ்வாய் காட்டில் வசித்து வரக்கூடிய அமுதா என்ற மாணவி 10 மற்றும் 11-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்து உள்ளார்.

இந்த மாணவியின் அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன்னுடைய படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அறிந்த டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கேட்டு உள்ளார். இதனால்  ரசிகர்கள் டி.இமானை பாராட்டி வருகின்றனர்.