வெயில் காலத்தில் அதிக டென்ஷனாக இருப்பது மின்கட்டணம் தான். ஏனென்றால் வெயில் காலத்தில் நாம் ஏசி, கூலர் அதிகம் இயக்குவதால் ஆயிரக்கணக்கில் எலக்ட்ரிசிட்டி பில் வருகிறது. எனினும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம். அந்த வகையில் 5 ஸ்டார் மதிப்பீட்டில் உள்ள ஏசிகள் மின் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.

எனவே நீங்கள் மின்சாரக் கட்டணத்தை சேமிக்க விரும்பினால், 5 நட்சத்திர மதிப்பீட்டில் ஏசி வாங்க வேண்டும். அதேபோல் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், மின் கட்டணம் குறைவாகவே வரும். CFL-ஆனது பல்பு மற்றும் ட்யூப் லைட்டை விட 5 மடங்கு மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது. ஆகையால் டியூப் லைட்டுக்கு பதில் CFL பயன்படுத்த வேண்டும்.