பில்லியன் கணக்கான மக்கள் உலகம் முழுவதுமே  வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி WhatsAppல் அனுப்பப்படும் மெசேஜ்களை இனி எடிட் செய்யும் வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. 2022ல் தொடங்கப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால், அதில் முதல்கட்டமாக லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷன் ஐபோன் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது ஆண்ட்ராய்டு போன்களுக்கு வழங்கப்படும். ஆனால், அனுப்பிய மெசேஜ்களை 15 நிமிடத்திற்குள் மட்டுமே எடிட் செய்ய முடியும்.