BSNL இப்போது தன் பயனர்களை கவரும் வகையில் ரூபாய்.397 விலையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 180 நாட்கள் ஆகும்.

இத்திட்டத்தில் நாளொன்றுக்கு 2GP தரவு வழங்கப்படுகிறது. உங்களது திட்டத்தின் தினசரி தரவு வரம்பு முடிந்ததும், இணைய வேகம் 40kbps ஆக இருக்கும். அந்த வகையில் தினசரி கிடைக்கும் டேட்டா முடிந்த பிறகும், நீங்கள் இன்டர்நெட் வசதியை அனுபவிக்க இயலும்.

அதாவது நாளொன்றுக்கு சுமார் 2 ரூபாய் செலவழித்தால் போதும், 6 மாதங்களுக்கு தினசரி 2GP டேட்டாவை பெறலாம். இத்திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் வசதிகளும் வழங்கப்படுகிறது. இதில் மலிவு விலையில் நீண்ட செல்லுபடியாகும் நாட்கள் கிடைக்கும்.