கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் தனியாக தன் சைக்கிளில் கடந்து செல்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் தன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சிறுவன் 22 மணி நேரம் சுமார் 130 கி.மீ சைக்கிள் ஓட்டி சென்றதை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

தன் தாயுடன் சண்டை போட்டதால்  சிறுவன் 140 கி.மீ தொலைவில் உள்ள மீஜியாங்கில் இருக்கும் தன் பாட்டி வீட்டிற்கு சென்று குறைகளை தெரிவிக்க முயன்றான். சாலையிலுள்ள சைன் போர்டுகளை கவனிக்கவில்லை எனவும் மீண்டும் மீண்டும் தவறான திருப்பங்களை எடுத்ததாகவும் சிறுவன் ஒப்புக்கொண்டான்.

இரவு சைக்கிளில் சென்ற போது வீட்டிலிருந்து கொண்டுவந்த ரொட்டி சாப்பிட்டு தண்ணீர் குடித்ததாக சிறுவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அச்சிறுவனை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் சிறுவனின் பாட்டி மற்றும் பெற்றோர் இருவரும் அவரை அழைத்துச் செல்ல வந்தனர். இதற்கிடையில் தாய், கோபத்தில் உன் பாட்டியின் வீட்டிற்குச் செல்லுமாறு சிறுவனை கடிந்து கொண்டதாக தெரிவித்தார்.