ஆரம்பத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு நாயகனாக என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றார். இதை அடுத்து இவர் நடிப்பில் ரிலீசான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றது. தற்போது டாடா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ், அபர்ணா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் டாடா திரைப்படத்தை பார்த்தேன். உணர்வு ரீதியாக இந்த திரைப்படம் என்னைத் தொட்டது. அனைவரும் குடும்பமாக சென்று தியேட்டரில் இத்திரைப்படத்தை பார்க்கலாம். இயக்குனர் கே கணேஷ் பாபு மற்றும் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கின்றார்.