அதிமுகவினுடைய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு,  பாண்டிச்சேரி சேர்த்து 40 தொகுதிகள்  இருக்கக்கூடிய நிலையில் நேற்றைய தினம் அதிமுகவினுடைய அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் 16 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் இரண்டு கட்சிகள் புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபி கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இது தவிர தேமுதிகவுக்கும் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் பட்டியல் முடிந்தது. மீதம் இருக்கக்கூடிய 17 தொகுதிகளுக்கான பெயர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.