2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்டமாக 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டையில் 2024 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் இறுதி 2வது கட்ட 17 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி  ஸ்ரீபெரும்புதூர் – பிரேம்குமார், வேலூர் – பசுபதி, தருமபுரி – அசோகன், திருவண்ணாமலை – கலியபெருமாள், கள்ளக்குறிச்சி – குமரகுரு,  திருப்பூர் – அருணாச்சலம், நீலகிரி – லோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை- சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி – கார்த்திகேயன், திருச்சி – கருப்பையா, பெரம்பலூர் – சந்திரமோகன், மயிலாடுதுறை – பாபு, சிவகங்கை – சேவியர் தாமஸ், தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி, நெல்லை – சிம்லா முத்துச்சோழன், கன்னியாகுமரி – பசுலியான் நசரேத், புதுச்சேரி – தமிழ்வேந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.