கர்நாடகாவில் தன்னுடைய சொந்த அக்கா மகளை கொடூரமாக தாய்மாமன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பைசைபள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபா. 21 வயதான இவரை தன்னுடைய சொந்த தாய் மாமா மால்தேஷ் என்பவருக்கு தன்னுடைய அம்மா திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் தீபா மேலே படிக்க வேண்டும் இதனால் கல்யாணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவர்களை பெற்றோர் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவரை மால்தேஷ்க்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர் .

மால்தேஷ் அதற்கு  சம்மதித்துள்ளார். ஆனால் தீபாவிற்கு தனது தாய்மாமனை சுத்தமாக பிடிக்காது என்று கூறப்படுகிறது .குடிப்பழக்கம் ஊரில் தகராறு என்று சுற்று திரியும் இவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.  அடுத்த மாதம் திருமணம் தேதி குறிக்கப்பட்டது. ஆனால் தீபா தன்னுடைய தாய் மாமாவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவை சமாதானம் செய்வதாக அவருடைய தாய்மாமா மால்தேஷ் வீட்டிற்கு பின்புறம் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதனால் தீபாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் காயமடைந்த தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இதனால் பயந்து போன அவர் தீபாவின் கழுத்தில் துப்பட்டாவை கட்டி அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டுவது போல தொங்கவிட்டு அங்கு இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து நடத்தி நடத்தி விசாரணையில் அக்கா மகளை கொலை செய்த் சொந்த தாய் மாமனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.