கோவையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய மாணவியிடமிருந்து தேர்தல் அதிகாரி விசிலைப் பிடுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இருபத்தி மூன்றாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)

அவ்வகையில் கோவையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்ற போது ஒரு மாணவி கையில் விசில் வைத்துக்கொண்டு அதனை ஊதியபடி நடனம் ஆடினார். அப்போது திடீரென மேடையேறிய தேர்தல் அதிகாரி அந்த மாணவியின் விசிலைப் பிடுங்கியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமாக விசில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது விதிமுறை மீறல் என அதிகாரிகள் கருதுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் எந்தவொரு அரசியல் கட்சியின் அடையாளமும் அரசு நிகழ்ச்சிகளில் இடம்பெறக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

ஆனால் இந்தச் சம்பவத்திற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேருந்து நடத்துனர் விசில் ஊதுவதையும் தடை செய்வீர்களா எனக் கேள்வி எழுப்பி வரும் அவர்கள் இது போன்ற நடவடிக்கைகள் தங்கள் கட்சிக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.