
சென்னையில் உள்ள ஜுக்காபுரம் பகுதியில் 13 வது நாளாக மக்களை தேடி நடை பயணத்தை நேற்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிருந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமிக்கு விமர்சிப்பதை தவிர வேறு என்ன வேலை உள்ளது. ஆனால் எங்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பல வேலைகள் உள்ளது. திமுக ஆட்சியின் மீது அசாராத, தளராத நம்பிக்கை ஏற்படுவதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார். தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.