ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 82 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.