
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நம்ம போராடினால் நிச்சயமாக சமூகநீதி கிடைக்காது. கூட்டம் நடத்தினால் நிச்சியம் கிடைக்காது. மாநாடு நடத்தினால் நிச்சயம் கிடைக்காது. காரணம் 55 ஆண்டு காலம் இரு கட்சிகள் ஆட்சி செய்து, கொடுக்காத சமூகநீதி. இனி இவர்கள் கொடுக்கப் போகிறார்களா? நமக்கு கிடைக்குமா ? கொடுக்கின்ற சூழலில் அவர்கள் இருக்கின்றார்களா ? பெறுகின்ற மன நிலையில் நாம் இருக்கின்றோமா ? அதற்கு ஒரே வழி ஆட்சி அதிகாரம்.
நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயம்… குறிப்பிட்ட ஜாதி… குறிப்பிட்ட மதம் – இனம் எல்லாம் கடந்தவன். என்னுடைய நோக்கம் அடித்தள மக்கள் முன்னுக்கு வர வேண்டும். அது எந்த சமுதாயமாக இருந்தாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. பாட்டாளிகள் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி. பாட்டாளிகள் இந்த சமுதாயத்தில் தான் இருக்கின்றார்கள். அந்த சமுதாயத்தில் தான் இருக்கின்றார்கள் என்று கிடையாது. எல்லா சமுதாயத்திலும் இருக்கின்றார்கள். பாட்டாளிகள் முன்னுக்கு வரவேண்டும். காரணம்… தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு சமுதாயம்…. இது போன்று ஒரு ஜாதி என நாம் சொல்கிறோம்.
ஏனென்றால்? ஜாதியை வைத்து தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடக்குமுறை நடந்தது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு பெருமை இருக்கிறது. ஆண்ட பெருமை எல்லாம் இருக்கின்றது. இடைக்காலத்தில் பிரச்சினைகள் எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே தமிழ்நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் ? அதில் சமூக நீதி அடிப்படையில்தான் முன்னேற்றம் அடையும்.
ஏன் இந்த பகுதியிலே அதிக கலவரம் நடக்கிறது ? ஏன் தென்தமிழ்நாட்டில் பிரச்சனைகள், எப்ப பார்த்தாலும் பதட்டமாக இருக்கிறது ? அதற்கு முக்கிய பிரச்சனை வேலை கிடையாது. வேலை வாய்ப்பு கிடையாது… பொருளாதாரம் முன்னேற்றம் கிடையாது… தொழில் வளம் கிடையாது… இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது என்றால் ? வேறு எதிலும் கண்ணோட்டம் இருக்காது. அந்த சூழல் இங்கே உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் என தெரிவித்தார்.