திமுக தொடர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியா என்கிறது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழுறாங்க. நம்ம மக்கள்கிட்ட ஏராளமான சமைய நம்பிக்கை இருக்கு. பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கு. அவங்களுக்கான அரசியல் சட்ட உரிமைகளும் இருக்கு. இத்தனை வேறுபாடுகளையும்,  கடந்து நாம எல்லோரும் ஒத்துமையா வாழ்றோம்.

சுருக்கமா சொல்லணும்னா….  இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். அதனாலதான் நம்ம நாட்டோட நிர்வாக‌ அமைப்ப உருவாக்குனவங்க ஒற்றைத் தமிழ் கொண்ட நாடா இல்லாம கூட்டாட்சி நெறிமுறை கொண்ட மாநிலங்களோட ஒன்றியமா உருவாக்குனாங்க. நம்ம பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள்….

இதுக்கு முன்னாடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவா நிறைய பேசினார். ஆனால் பிரதமர் ஆகி டெல்லிக்கு வந்ததுக்கு அப்புறம் அரசியல் அமைப்பு சட்டத்தோட முதல் வரியே அவருக்கு பிடிக்காம போச்சு … அந்த வரி என்னன்னா….  ”India, that is Bharat, shall be a Union of States” முதலமைச்சரா மாநில உரிமைகளை பேசின அவரு,  இப்போ பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறாரு.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி,  மாநிலங்களை ஒழிக்கணும்‌. அப்படி இல்லன்னா முனிசிபாலிட்டிகளாக மாத்திடனும்னு நினைக்குது. மாண்புமிகு மோடி அவர்கள்… முதலமைச்சராக  இருந்த வரைக்கும் பேசுனதுக்கும்,  பிரதமரானதும் செய்யறதுக்கும் இருக்கிற வேறுபாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டும் உங்ககிட்ட சொல்ல விரும்புறேன் என தெரிவித்தார்.