தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறையின் கீழ் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களிலும் 3 மீட்பு நிலையங்களில் பணியாற்றும் 6673 இணைப்பு வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளினால் தீ விபத்துக்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் பட்டாசு விபத்து குறித்த தகவல் பெறப்பட்டதும் கிராம பகுதிகளுக்கு 10 நிமிடத்திற்குள், நகரப் பகுதியில் ஆரணி நிமிடத்திற்குள் செல்ல தீயணைப்புத்துறையினர் தயாராகி வருகிறார்கள்.

இதற்காக சென்னையில் 26 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருப்பார்கள். இது தவிர சிறிதாக ஏற்படும் தீயை அணைப்பதற்கும் பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கும் உடனடியாக சென்று அணைக்கவும் ஜீப் வடிவிலான 4 தீயணைப்பு வாகனங்களும் எட்டு தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.