தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அதில் தகுதி உள்ளவர்களின் பெயர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகளே உரிமை தொகை திட்டத்தில் புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 1.06 கோடி பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு சுமார் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களின் 7.35 லட்சம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்ட பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.