நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி. தீவிரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.