நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, அரசுத்துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பு. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமாக இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. ஏழ்மையை அகற்ற நடவடிக்கை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்யப்படுகிறது என்று கூறினார்.