நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.  அவர்  2047 ஆம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும். 2047 ஆம் ஆண்டில் அடைய இருக்கும் லட்சியத்திற்கு அடித்தளத்தை அமைக்க வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடை போட்டு வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது என்று கூறினார்.