கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் டிரைவரான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். நேற்று முன்தினம் கனகராஜ் அய்யாசாமி மலை கோவில் செல்லும் சாலையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.