
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடக மாநில துணை முதல்வர் D.K சிவக்குமார் சொல்றாரு… தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட நான் கொடுக்க மாட்டேன் என சொல்லுறாரு. பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலே ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கண்டனம் தெரிவிச்சி இருக்க வேண்டியதுதானே ? காங்கிரசுடைய கூட்டணி கட்சிக்கு நாங்க வந்தோம். ஆனா இந்த நேரத்துல அந்த கருத்து சொல்றது தப்பு.
எங்களை பொருத்தவரையில எங்களோட உரிமையை நிலை நாட்டுவோம். நாங்க அதுக்காக போராடுவோம். இல்லனா… விடமாட்டோம் என ஏதாவது வாய் திறந்து ஸ்டாலின் சொன்னாரா ? ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை வாய் திறக்க மாட்டாங்க. மத்தியில கூட்டணி ஆட்சில இருக்கும்போது… அமைச்சரவையில் சேக்கனும்னு சொல்லிட்டு அதுக்கு மட்டும் வாய் இருக்கும்.
இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் சாவுறாங்க… போரை நிறுத்த சொல்லுறீயா ? இல்லனா உனக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் வாங்குவேன் அதுக்கு வாயிருக்காது. இது வேற வாய் ,, அது வேற வாய். அதனால எல்லாமே பாத்தீங்கன்னா… நாற வாய்ங்க… நார வாய் ஆச்சு தான் நடந்துக்கிட்டு இருக்கு இன்னைக்கு என விமர்சனம் செய்தார்.