செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பணத்த பொருளா வச்சி வெற்றி பெறலாம்னு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் திட்டமிடவில்லை. “NOT  ONLY THIS  ELECTION “.EVERY ELECTION இதான் நடக்குது. ஒவ்வோரு தேர்தலையும் பெரிய இன்வெஸ்ட்மென்ட் பணம் தான். அவங்களுக்கு இருக்குற ஒரே கோட்பாடு பணத்தை வச்சி,  வாக்கு வாங்கிக்கிலாம். தான் தான் மக்களுக்கு செய்த சேவையை எடுத்து சொல்லியோ,   அத பத்தி பேசியோ கிடையாது.

இந்த நாட்டுல… இந்திய நிலப்பரப்புல….  மத்தில ஆளுற சரி –  இங்கயும் சரி- செயல் அரசியல் கிடையாது, சேவை அரசியல் கிடையாது. வெறும் செய்தி அரசியல் தான். விளம்பர படுத்திக்கிறது. இப்போ நீங்க பாருங்க…. பரமக்குடி… ராமநாதபுரம் போங்க. ஒரே அம்மா..  சென்னைல இருந்து இங்க வர பூ கட்டிட்டு உக்காந்துட்டு இருக்குறமாதிரி பதாகை வச்சி இருக்காங்க

செப்டெம்பரில் 15-ல இருந்து ரூபாய் 1000  குடும்ப தலைவிக்கு…  செப்டெம்பர்ல தான குடுக்க போறீங்க. அதுக்கு  எத்தனை கோடி செலவு பண்ணிருக்கு ? இந்த விளம்பரத்துக்கு….  இதன் சேவை இன்னும் தொடங்கல,  செயல் இன்னும் ஆரம்பிக்கல,  செய்தி ஆரம்பிச்சிருச்சு.வெறும் விளம்பரம் படுத்தி கொள்வது தான். நான் அதை செய்தேன்.. இதை செய்தேன் என்று… எதை செய்த என்பதை  நாங்க சொல்லணும்பா …நீ இத செஞ்சன்னு .

உலகத்துல இந்த மாதிரி ஒரு நாட்டை பாத்து இருக்கீங்களா ? …தக்காளியை திருடிட்டு போயிருவான்னு 2 செக்யூரிட்டி போட்டு இருக்கான். இராணுவம் கூட போட்டு பாதுகாக்க வாய்ப்பு இருக்கு..நேத்து ஒரு தம்பி எழுதிருக்கான்… அண்ணே … கல்யாண பொண்ணு மாப்பிளைக்கு நாங்க ஒரு கூடை தக்காளி பரிசு குடுத்தோம்னு … நிலைமை எங்க போயிடு இருக்கு பாருங்க ? 

பி.ஜே.பி, காங்கிரசு, இந்திய கட்சி, திராவிட கட்சி இதுகளோட எந்த காலத்துலையும் எங்களுக்கு தேர்தல் உடன்படிக்கை இல்ல. இத வந்து தேஞ்ச ரெகார்ட் மாதிரி பேசிட்டு இருக்கோம். திரும்ப திரும்ப அதே சொல்ல வைக்கிறீங்க, கூட்டணி நான் வைக்க மாட்டேன், தனித்து  தான் போட்டியிடுவேன். எத்தனை ஆண்டு ஆனாலும்  நான் தனித்து தான் போட்டியிடுவேன். என்னோட கோட்பாடு அப்படி இருக்கு. எனவே நான் யாரோடையும் சேர மாட்டேன் என தெரிவித்தார்.