”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சின்ன பசங்க சேர்ந்து இவ்வளவு நேர்த்தியாக உரையாடல்…. எங்கப்ப்பா  பாலவேந்தர் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா… தேவை இல்லாத உரையாடல்கள் காட்சியிருக்காது. அதே மாதிரி தான் ஐயா மகேந்திரன் படம். அது மாதிரி தான் இதுவும்….  அந்த அளவிற்கு ஒப்பனை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கட்சியும் என் காட்சி தான் என சிரித்துக்கொண்டே சொல்ல, அருகில் இருந்த ரோபோ சங்கரிடம், நீ சொல்லுடா… நான் சொல்வதை நம்பவில்லை…  என் தம்பியும்,  நானும் ஒன்னா தான்இக்கருத்து  படம் பார்த்தோம். அவனை கேளுங்க  என்று தெரிவித்தார். உடனே அருகில் இருந்த ரோபோ சங்கர் பேசுகையில், எல்லா காட்சிகளுமே அண்ணன் அப்பப்ப கூப்பிட்டு… டேய் நம்ம கல்லூரி காலங்களில் பண்ண சேட்டைகள் எல்லாம் அவ்வளவு அழகா,  நேர்த்தியாக அப்படின்னு சொன்னாரு என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், யாரும் நடிக்கவில்ல.  படத்தில் பார்க்கும் பொழுது யாரும் நடிக்கவில்லை… ரொம்ப இயல்புத்தன்மையாக…. புது முக இயக்குனர் இயல்பாகம் நடிக்க வைத்துள்ளார். கதாயாகியாக நடிச்சது எல்லாம் கேரளாவில்இருந்து  புது பொன்னை  எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு அருமையாக நடத்திருக்கிறது..

உள்ளுணர்வை கொண்டு வருவது…. வசனம் பேசுவது வேறு,  வசனம் இல்லாத காட்சிகளில்  நுண்ணுணர்வை முகத்தில் வெளிப்படுத்துவது என்பது அசாத்திய ஆற்றல் வேண்டும் அதற்கு….  நீண்ட  பயிற்சி இருக்கணும்…. அது ரொம்ப கடினம்… உள்ளுக்குள்ள…. மனசுக்குள்ள வசனத்தை பேசிக்கொண்டு நடிப்பது  தான் ஆசாத்தியமானது. அதை சின்ன சின்ன பசங்கள் நல்லா பண்ணியிருக்கிறார்கள்.  நடிகர் ரியோ ராஜ்க்கு இது பெரிய படம்…. ரியோ-க்கு பெரியப் படம்.. நான் அவன்கிட்ட சொன்னேன்.. நீ எதோ, காமெடி, நகைச்சுவை படம் பண்ணிட்டு இருந்த… இதுதான் நீ நடித்ததிலேயே உருப்படியான  படம்… இதை புடிச்சுட்டு மேல ஏறிருன்னு சொன்னேன் என தெரிவித்தார்.