செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அறநிலைத்துறைகளில் முறைகேடு இருக்கலாம். அது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதுதான் சரியே தவிர, அந்த துறையே இருக்கக்கூடாது என்பது நிலைப்பாடு சரியில்லை. அது பிரைவேட் கையில் கொடுத்தால்… அறநிலைதுறை கோயில்களுக்கு உள்ள நிலங்களே  இல்லாமல் போய்விடும்.

தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். முன்னாள் அமைச்சர்களாக  இருந்தவர்கள் மீதும்,  சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் தனி நீதிமன்றம் அமைத்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்கள்.  ஆனால் அரசாங்கம் அதிலும் சுணக்கம் காட்டியது ஏன்  எதற்கு என்று தெரியவில்லை ?

இன்றைக்கு பலரை பாதுகாக்கின்ற விதமாக கவர்னர் செயல்படுவது தவறு. தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி வருங்காலத்தில் ஏற்பட வேண்டும் என்றால், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் எந்த கருத்தை சொல்லுகிறார் என்று தெரியவில்லை. பொதுவாக…. நான்  யாரையும் தனிப்பட்ட முறையில்,  கோபத்தில் செல்லவில்லை…. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு யாரும் தடையாக  இருக்கக் கூடாது, என்பதுதான் உண்மை என தெரிவித்தார்.