மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

மிக்ஜம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் 2ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், 3ம் தேதி உருவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
ஏற்கனவே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 24 மணி நேரத்திற்குள் உருவாகும் என கணிக்கப்பட்டது. தற்போது அதேபோல புயல் 2ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது 3ம் தேதி அது புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வருமா என பல கேள்விகள் இருந்தன
தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தை நோக்கி வரும் என்பதை உறுதி செய்துள்ளது. 4ம் தேதி அதிகாலை தமிழகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது