செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ,  தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆளும் கட்சியான  திமுக எம்எல்ஏவின் வீட்டிலேயே ஒரு சிறுமிக்கு இந்த அளவிற்கு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அவர் வெளிய வந்து தனக்கு விழுந்த அடி எல்லாத்தையும் சொல்லி உள்ளார்.

யார்  ஆட்சியில் இருக்கின்றார்களோ, அவர்கள்  வீட்டிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால்,  நம் சமுதாயத்தில்….. நம் நாட்டில்….. தமிழகத்தில் எங்கிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். சர்வே எடுத்து பாருங்கள் உங்களுக்கு தெரியும். விழுப்புரத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், …. பத்தாவது வகுப்பு படிக்கும் 2 குழந்தைகள்  ஸ்கூலினுடைய ஆசிரியர் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள்.

எஃப்ஐஆர் பைல் பண்ணவில்லை. ஒன்னும் பண்ணவில்லை. அவர்கள் எனக்கு போன் பண்ணி என்னிடம் பேசி இருக்கிறார்கள். நான் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ.  அது பண்ணியிருக்கிறேன், பேசி இருக்கிறேன். இந்த மாதிரி விஷயங்கள்….. அவுங்களுக்கு கேஸை வாபஸ் வாங்கிக்கோங்க என மிரட்டல் எல்லாம் போகிறது. பேரம் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். அப்படியெல்லாம் இருக்கும் பொழுது….  திமுகவுக்கு மட்டுமல்ல, இங்கே இருக்கின்ற அத்தனை பேருக்கும் தெரியும்.  திமுக ஆட்சியில் நிச்சயமாக பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.

இது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது எந்த வகையிலும் ஒரு ஆக்ஷன் எடுக்க போகிறார். அவர்கள் கட்சியில் இருக்கின்ற வீட்டிலேயே…… உங்கள் எம்எல்ஏ வீட்டிலே ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை நடந்து இருக்கிறது.  முதலமைச்சராக ஒரு வார்த்தை பேசி இருக்கிறாரா ? இல்லை ஒரு ஆறுதல் தெரிவித்தாரா ? இல்லை இது நடந்தது தவறு.   அப்படி நடந்திருக்கக்கூடாது. அவர்களுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று சொன்னாரா ? எதுவுமே சொல்லவில்லை என தெரிவித்தார்.