சமீபகாலமாக தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் கூட்டணி கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

“கூட்டணி கட்சிகளில் நம்மைப் பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள்; அவர்களின் சதிக்கு நாம் பலியாகிவிடக்கூடாது” என்று தொண்டர்களுக்கு அவர் கறாராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள்” என நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.