
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேவேந்திர குலம் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகள் எல்லாம் ஒன்றாக தேவேந்திரகுல வேளாளர் என்ற கோரிக்கையை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவளித்திருக்கிறது. தேவேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவர்கள் எங்களுக்கு பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இருக்கிறது.
இந்த கோரிக்கை சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒற்ற கருத்துடன் இந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வையுங்கள். என்னுடைய கணிப்பு 70 விழுக்காடு இருக்குமா ? 80 விழுக்காடு இருக்குமா ? முழுமையாக வரணும்… ஆனால் வந்ததுக்கு பிறகு மாநில பட்டியல் ஒன்னு இருக்கு…. மத்திய பட்டியல் ஒன்னு இருக்கு…
தமிழ்நாட்டில் பண்ணிடலாம்…. தனியா ஒரு பட்டியல் கொண்டு வரலாம்… இதுல கொஞ்சம் சிக்கல் எல்லாம் இருக்கு. இது எல்லாம் பேசி… இதற்கு ஒரு கருத்துரங்கம்…. ஒரு கூட்டம் போடுங்களேன்…. போட்டு ஒருமித்த கருத்து வரட்டும். பாட்டாளி மக்கள் கட்சி இந்த கருத்துக்கு முழு ஆதரவு கொடுக்கிறது. இதெல்லாம் ஒரு மனநிலை… அதிலிருந்து வரவேண்டும் என்று ஒரு எண்ணம். நிச்சயமாக அதை மதிக்க வேண்டும்.
புரட்சியாளர் இமானுவேல் சேகரன் தியாகம் நிச்சயமாக வீண் போகாது. அவருடைய வரலாறு நிச்சயமாக வருகின்ற தலைமுறைகளில் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்… குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்… மீண்டும் சொல்வது… அவரை எதோ ஒரு ஜாதிக்குள் அடக்கி வைக்க முடியாது என தெரிவித்தார்.