ராமர் கோவில் காட்டியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான்,அது ராம ராஜ்ஜியம்… என்னுடையது இராவண ராஜ்யம்…  ராவணன் இல்லாமல் ராமாயணம் முழுமை  பெறாது. எப்போதுமே நாங்கள் கதாநாயகர்கள்…   அது கதையோ,  இதிகாசமோ, புராணமோ அதை  நாங்கள்  மதிக்கிறோம். முக்கியமான கேள்வியை கேட்டிருக்காரு….   ராம ராஜ்யத்தை,  இந்த இராவண ராஜ்யம் வாழ்த்துகிறது.

ராவணன் 14 வருடங்கள் சீதை பிராட்டியை பத்திரமாக பாதுகாத்தவன். அதனால் இந்த இந்தியாவை பாதுகாக்க இனி ராவணன்களால் முடியும். ராவணனும்,  ராமனும் சேரலாம்,  தப்பு ஒன்றும் இல்லை…  இதிகாசத்தில் சேர்ந்துதான் இருக்காங்க. இங்கு தமிழக மற்றும் அனைத்து தாழ்த்தப்பட்ட சிறுபான்மை இனத்தின்…  பழங்குடி மக்களின் உரிமைகளை வென்றெடுக்க,

இந்தியா முழுமைக்கும் இந்த டெமாக்ரடிக்ஸ் டைகர்ஸ் ஆஃப் இந்தியா பயணிக்கும்.  பொறுப்பாளர்களை நியமிக்கும்..  உங்களது ஒத்துழைப்பும் வேண்டும். நாங்க சும்மா  உக்காந்துட்டு இருக்க முடியாது.  நான் இன்னும் சுழட்ட ஆரம்பிக்கல,  சாட்டையை சுழட்ட ஆரம்பிக்கல… களத்துல சந்திப்போம். யார் கூடவும் முடிவு எடுத்து தானே சேர முடியும். நான் தனி ஒருவனாக எல்லாம் முடிவு எடுக்க முடியாது. இது  மக்களுக்கான அதிகாரம்… தொடர்ந்து ஏழை மக்களை  ஏமாத்திட்டு இருக்கின்ற  யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என பேசினார்.