
திமுக மாநாட்டில் மொழிப்போர், ஹிந்தி திணிப்பு குறித்து உரையாற்றிய கம்பம் செல்வேந்திரன், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரே ஓட்டு ஒரு வித்தியாசத்தில்…. தேர்தல் வருகின்ற காரணத்தால் நான் நினைவுபடுத்துகிறேன். ஒரு ஓட்டு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இந்திய அரசியல் சாசன சபையில் இந்தியாவை ஆட்சி மொழியாக ஹிந்தி வர வேண்டும், வேண்டாம் என்பதற்கு வாக்கெடுப்பு நடந்தது.
அந்த வாக்கெடுப்பில் ஹிந்திக்கு ஆதரவாக 73 ஓட்டுகள் கிடைத்தன. ஹிந்திக்கு எதிராக 73 ஓட்டுகள் கிடைத்தன. சமமான வாக்குகளை பெற்றார்கள். ஆனால் விதியின் படி அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் ஹிந்திக்கு ஆதரவாக தன்னுடைய ஒரு ஓட்டை போட்டார். அந்த ஒரு ஓட்டை போட்ட காரணத்தினால் தான், ஹிந்தி இன்றைக்கு ஆட்சி மொழி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய விளைவுதான் தோழர்களே போர் தொடருகிறது.
1938இல் ராஜாஜி முதலமைச்சராக இருக்கிற பொழுது ஹிந்தியை திணித்தார். 125 பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கினார். தமிழர்கள் கொதித்தார்கள், கொந்தளித்தார்கள். கரந்தை தமிழ் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. திருவையாறு தமிழ்ச்சங்கம் முதல் முதலாக ஹிந்தியை எதிர்த்து ஊர்வலம் நடத்தி கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.
பெரியார் கைது செய்யப்பட்டார். பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். அண்ணா கைது செய்யப்பட்டார். 4 ஆண்டு காலம் 4 மாத காலம் சிறை தண்டனை பெற்றார். அண்ணாவின் உடைய பொது வாழ்க்கையில் முதல் முறையாக அவர் சிறைக்கு செல்வது அதுதான் முதல் தடவை. ஹிந்தியை எதிர்த்து 1938 இல் சிறைக்குச் செல்வதற்காக நீதிமன்றத்தை விட்டு வெளியே வருகின்றார். பத்திரிகையாளர்கள் அண்ணாவை கேட்கிறார்கள்… உங்கள் அரசியல் வாழ்க்கையில் முதல் முதலாக நீங்கள் சிறைச்சாலைக்கு செல்கிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது ? என அண்ணாவை பார்த்து கேட்டார்கள்…
அண்ணா சொன்னார்…. புதிதாக மனம் முடித்த ஒரு பெண் மருத்துவரிடம் தன் கையை காட்டிய பிறகு மருத்துவர் நாலு மாதம் என்று சொன்னால், அந்த மங்கைக்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைவாளோ, அவ்வளவு மகிழ்ச்சியை நான் அடைகிறேன் என்று அண்ணா சொன்னார். அப்படி நடந்தது 1938லே நடந்த அந்த போராட்டம் என தெரிவித்தார்.