தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவனை கடவுளாக ஏற்று வழிபடக்கூடிய திருவடிக்குடில் சுவாமிகள் அமர்ந்திருக்கின்ற மேடையில் நான் நான் ஒன்றை வேறுபடுத்தி விளக்க விரும்புகிறேன். ஹிந்துயிசம் என்பது வேறு, ஹிந்துத்துவா என்பது வேறு.ஹிந்துத்துவா என்பது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார்களின் அரசியல் செயல் திட்டம்.

ஹிந்துயிசம் என்பது உங்கள் நம்பிக்கை. சிவன் மீது நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை ஹிந்து பிலிப். மகாவிஷ்ணு மீது நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை ஹிந்து பிலிப். முருகன் மீது நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை ஹிந்து பிலிப், அது வேறு.

சிவனின் திருவிளையாடல் என்பது வேறு. மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்பது வேறு. சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்று முருகன் இடத்தில் அவ்வை பாட்டி கேட்ட கதையாடல் என்பது வேறு. அய்யனையும், அம்மையையும் சுற்றி வந்த மாம்பழம் பெற்றுக்கொண்டான் விநாயகர் மூர்த்தி. இவன் மயிலெடுத்து சுத்தி வந்து ஏமாந்து போனான் முருகப்பெருமான் என்று சொல்லுகின்ற கதையாடல்கள் வேறு. அது பற்றி நாம் பேசவில்லை.

அந்த நம்பிக்கையை நாம் பேசவில்லை.  தனிப்பட்ட முறையிலே எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா ?  இல்லையா ? என்பது வேறு. ஆனால் அதை நாம் விமர்சிக்கவில்லை. அது அல்ல இந்துத்துவா என்பது…  முருகன் மயிலேறி பறந்து வந்தது இந்துத்துவா அல்ல. விநாயகர் அப்பனையும்,  அம்மாலையும் சுற்றி வந்து மாம்பழத்தை பெற்றுக் கொண்டது ஹிந்துத்துவா அல்ல.

அதேபோல சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த போது மகாவிஷ்ணு வரா அவதாரம் எடுத்து பூமிக்கு அடியில் தோண்டிக்கொண்டே போய் சிவனின் அடியை தொட்டான் என்பது திருவிளையாடலில் ஒன்று. நாம் அதை பத்தி பேசவில்லை அது இந்துத்துவ அல்ல.

சிவனைப் பற்றிய.. மகாவிஷ்ணுவை பற்றிய…. அல்லது துர்காவை பற்றிய… காளியை பற்றிய… லக்ஷ்மியை பற்றிய… கதையாடல்களை நாம் இந்துத்துவா என்று சொல்லவில்லை.  புராணங்களை நாம் இந்தத்துவா என்று சொல்லவில்லை. அது ஹிந்துயிசம் என விளக்கினார்.