சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் ஓட்டும் திறனைக் காட்டும் வீடியோ வைரலாகி, பார்வையாளர்களை சிரிக்கவும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு கடையின் முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, பணி முடிந்து திரும்பிய அந்தப் பெண், ஸ்கூட்டரை பின்னோக்கி நகர்த்த முயற்சித்தார்.
ஆனால், எப்படி ரிவர்ஸ் செய்வது என்பது அவருக்கு புரியவில்லை. பல முறை முயற்சித்தும், ஒரு கட்டத்தில் ஸ்கூட்டரிலிருந்து கீழே விழ இருந்தார். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மற்றொரு பெண் பல ஆலோசனைகள் வழங்கியும், அவர் ஸ்கூட்டரை சரியாக நகர்த்த முடியவில்லை.
இறுதியாக, அவர் ஸ்கூட்டரை முன்னும் பின்னுமாக நகர்த்தி, சாலையில் குறுக்கே நிறுத்தி வைத்தார், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இந்த டிரைவிங் திறமையைப் பார்த்தால் மலைப்பாக இருக்கு! இப்படியும் ஓட்டுவார்களா?” என்று ஒருவர் கேலி செய்தார்.
மற்றொருவர், “இந்த வீடியோவை ஆர்.டி.ஓ அதிகாரிகள் பார்த்தால், இவருக்கு எப்படி லைசென்ஸ் கொடுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொள்வார்கள்!” என்று கூறினார்.
“இவருக்கு லைசென்ஸ் இருக்கிறதா?” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, “இவரை பைக் ரேஸிங்குக்கு அனுப்பினால், கோப்பைகளை வென்று வருவார்!” என்று மற்றொருவர் நகைச்சுவையாகப் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, மக்களுக்கு பொழுதுபோக்காகவும், ஓட்டுநர் திறன் குறித்த விவாதமாகவும் மாறியுள்ளது.
