
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும் போது திட்டமிட்டு பணி செய்தோம். இன்றைக்கு கனமழை பொழிந்த உடனேயே மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் கூட….. எந்தெந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது ?
எந்தெந்த பகுதியில் மக்கள் பாதிக்கிறார்கள் ? என்று கண்டறிந்து, உடனுக்குடன் உணவை அவர்களுடைய இல்லத்தில் கொண்டு சேர்த்தோம்.அதெல்லாம் அண்ணா திமுக ஆட்சியில் நடந்தது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை அழைத்து வந்து முகாமில் தங்க வைக்கிறாங்க… மாந்தோப்பு முகாமில் நேற்றைய தினம் நான் ஊடகத்தில் பார்த்தேன்…
அந்தப் பகுதியில தங்க வைத்திருக்கிற முகாம்ல…. உங்களுக்கு உணவு கிடைத்ததா ? மருத்துவ வசதி கிடைத்ததா ? என இங்கே இருக்கின்ற ஊடக நண்பர்களிடம் பேட்டி அளிக்கின்ற போது….. எதுமே கிடைக்கல… எந்த அதிகாரியும் வந்து பார்க்கலைன்னு அந்த பேட்டியில் சொன்னாங்க…. உங்கள் தொலைக்காட்சி மூலமாகத்தான் கண் கூடா நான் பேட்டி பார்த்தேன்.
இந்த அரசை பொருத்தவரைக்கும்….. முதலமைச்சரை பொறுத்தவரைக்கும்…. திமுக அமைச்சர்களை பொறுத்தவரைக்கும்…. அதிகாரிகளை பொறுத்தவரைக்கும்…. எல்லாம் செய்துவிட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்… ஆனால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காம, எந்த ஒரு வசதியும் கிடைக்காமல்…. மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள்…
மாந்தோப்பில் இருக்கின்ற முகாமில் தங்குகின்ற போது…. அவர்களுக்கு பாய் கொடுக்கணும், போர்வை கொடுக்கணும், பெட்சீட் கொடுக்கணும்…. எதுவுமே கொடுக்கல…. அண்ணா திமுக ஆட்சியில் இருந்தபோது திட்டமிட்டு முகாமில் தங்கி இருக்கின்ற மக்களுக்கு பாய் கொடுத்தோம், பெட்ஷீட் கொடுத்தோம், உணவு பொருட்கள் கொடுத்தோம், குழந்தைகளுக்கு பால் கொடுத்தோம். யாராவது காச்சல் ஏற்பட்டிருந்தால், ஏதாவது உடல்நிலை சரியா இல்லாம இருந்தால், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ முகாமில் அமைத்து இருந்தோம்… இந்த ஆட்சியில் ஒண்ணுமே இல்லை என தெரிவித்தார்.