செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே  இருப்போம். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வோம். எல்லா பதில் கேள்விகளையும் கேட்போம்.

காரணம் முதல் தலைமுறைக்கும் – மூன்றாம் தலைமுறைக்கும் நடக்கின்ற யுத்தம். முதல்  தலைமுறை கொஞ்சம் தட்டு தடுமாறி தான் ஜெயிக்க முடியும். நேரடியா ஜெயிக்க முடியாது… அந்த பக்கம் பண பலம்,  இருக்கு படைபலம் இருக்கு. அதிகாரபலம் இருக்கு. எல்லாம் இருக்கு.  எங்கிட்ட ஒண்ணுமே இல்ல.. மக்கள் சக்தி மட்டும் தான்,  நம்ம பக்கம் இருக்கு. அதை பாரதிய ஜனதா கட்சி ஒரு ஒரு முறையும் மக்கள் சக்தியை எவ்வளவு முக்கியமான சக்தி என நாங்கள் காட்ட விரும்புகின்றோம்.

DMK பைல்ஸ் பார்ட் -2 ரெடியா இருக்கு. பார்ட் -2 வை  பொருத்தவரைக்கும் அது பினாமி சொத்துக்கள். கிட்டத்தட்ட பினாமிகளுடைய  பெயரே ஒரு 300 பேருக்கு மேல வருது. பினாமியினுடைய பெயரை பொது வெளில டிஸ்குளோஸ் பண்றதா ? இல்ல,  அத ஆளுனர்கிட்ட குடுக்குறதா ?  ஏனென்றால் இப்போது  தமிழகத்தில் சிபிஐ  அனுமதியை இவர்கள் எடுத்துவிட்டார்கள். சிபிஐக்கு மாநில அரசு கொடுத்திருக்கக் கூடிய  அதிகாரத்தை இவுங்க எடுத்துட்டாங்க.

நாம முதல்வர் தி.ரு ஸ்டாலின் அவர்கள் மீதே சிபிஐ_ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தோம். இப்போ CBI prosecution sanction அவங்க எடுத்ததுனால முதலமைச்சர் தப்பிச்சிக்கலாம்… அப்படினு நினைக்கிறாரு. எனவே  அந்த பினாமிகளோட பெயரை பொது வெளில வெளியிடலாமா ? எப்படி வெளியிடுவது ?  என்ற டிஸ்க்ஸ்ல இருக்கோம்.

இதை சில்டு கவர்ல கவர்னர்கிட்ட குடுக்குறதா ? இல்லனா…  டிஜிபி கிட்ட குடுக்குறதா ? இல்லனா…  டி.வி.எஸ்.சி கிட்ட குடுக்குறதா? இல்லனா…  பொதுவா எல்லாத்தையும் சொல்லிடலாமான்னு…. இதை பொறுத்த வரை டிஎம்கே பைல்ஸ் பார்ட் -1 பாத்தீங்கன்னா…..  

அது அந்த 13 பேர், அவருடைய சொத்து விபரம்…  அவர்கள் சம்பாதித்து இருக்கக்கூடிய சொத்து….  அதை  affidavit கொண்டு வர வரல அதை நம்ம சொல்லி இருக்கோம். பார்ட்-2 -வை பொறுத்த வரைக்கும்…  பினாமி பேருல அவங்க வாங்கி இருக்க கூடிய லேண்ட், பினாமி பேருல வாங்கி இருக்க கூடிய நிறுவனங்கள், இது எல்லாம் பார்ட்-2 ல இருக்கு… எப்படி இருந்தாலும் பாதையாத்திரைக்கு முன்பாக இதை செய்யணும் என தெரிவித்தார்.