திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இங்கே சங்பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. அவர்கள் இன்னும் அமைப்பு ரீதியாக வலிமை பெறவில்லை. ஆனாலும், அவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்.

குறிப்பாக, தமிழ்நாடு அரசுக்கே நெருக்கடி தருகிறார்கள். நம்முடைய மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதிக்கே  சவால் விடுகிறான் RN ரவி.  RN ரவி அவர்கள் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அவர் மிகவும் ஆபத்தானவர்,  அவரை இங்கே நியமிப்பது தமிழ்நாட்டை குறி வைத்து விட்டார்கள் சங்பரிவார்கள் என்று தான் பொருள் என நான் அவரை நியமித்த போதே அறிக்கை வெளியிட்டேன்.

இன்றைக்கு அவர் தான் ஆளுநர் என்பதை மறந்து விட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டராக,  ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தைச் சொல்லி…  தமிழ்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றபடுகின்ற மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. ஏராளமான மசோதாக்கள் கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றன.

ஆளுநர் உரையை முழுமையாக எழுதி – அச்சிட்டு தருகிற அந்த உரையை முழுமையாக படிப்பதில்லை. சமூக நீதியை உச்சரிக்க மறுக்கிறார்,  சமத்துவத்தை உச்சரிக்க மறுக்கிறார், பெரியார் – அம்பேத்கர் பெயரை உச்சரிக்க முடியாது என்கிறார். பெண் உரிமை – பெண் விடுதலையை பேச மாட்டேன் என்கிறார். இதுவெல்லாம் என்ன பொருள் மாநில அரசை நான் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என தெரிவித்தார்.