செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சகோதரரே உங்களுக்கு தெரியும்… நம்முடைய டிஎம்கே பைல்ஸ் 1 ஏப்ரல் 14ஆம் தேதி அன்று  வெளியிட்ட பிறகு, குறிப்பாக ஆளும் கட்சியில் பல பேருக்கு அது கோபத்தை மூட்டி இருக்கும். அந்த டிஎம்கே பைல்ஸ் 1 வந்த பிறகு திமுகவினுடைய முதலமைச்சர் உட்பட அமைச்சர் பெருமக்கள், எம்பிகள் எல்லோருமே வேற வேற ரூபத்துல கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு மேல அவதூறு வழக்கு நோட்டீஸ்  அனுப்பி இருந்தாங்க.

பாரதிய ஜனதா கட்சியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இன்னைக்கு அடுத்த கட்டத்தை நோக்கி சென்றிருக்கிறது. வாய்ப்பேச்சாக இல்லாமல்,  அறிக்கையாக இல்லாமல் நீதிமன்றத்தில் அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம். சகோதர,  சகோதரிகளே …! அண்ணன்  TR. பாலுஅவர்கள் இதற்கு முன்பு  கோர்ட்ல சத்தியப்பிரமாணம் பண்ணிட்டு போயிருக்காரு. சத்தியப்பிரமாணம் செய்து கோர்ட்டில் கொடுத்து இருக்க கூடியதிலே சில பொய்கள் இருக்குது. 

நமக்கு தெரியும்   TR. பாலு அவர்கள் 2004 இல் இருந்து 2009 வரை ஊழல் அதிகமாக செய்ததற்காகத்தான்,  2009-இல் கேபினட்டில் அவருக்கு இடமில்லை. இது சொன்னதை கூடஅவதூறு வழக்கில் போட்டிருக்கிறார். அண்ணன் அழகிரி அவர்கள் 2014 ஏப்ரலில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரையில்  சொல்றாங்க. இந்த மாதிரி TR பாலு  எவ்வளவு ஊழல் பண்ணாரு ? எப்படி எல்லாம் ஊழல் பண்ணாரு ? எவ்ளோ கப்பல் வச்சிருக்காரு?

சேது சமுத்திரத் திட்டம் மூலமாக எவ்வளவு சம்பாதிப்பதற்கு கிளம்பி இருக்கின்றார்,  எல்லாம் எனக்கு தெரியும்ன்னு  கலைஞர் கருணாநிதி அவருடைய மகன் அழகிரி அவர்கள்…  நான் சொன்ன அதே குற்றச்சாட்டை 2014 ஏப்ரலில் சொன்னாங்க. அதற்கு இதுவரை அழகிரி அவர்கள் மீது இவர் எந்த வழக்குமே தொடுக்கல,  அழகிரி அவர்கள் மீது எந்த அவதூறு வழக்கும் போடல. அழகிரி வச்ச அதே குற்றசாட்டை  நாமளும் மக்கள் மன்றத்தில் வச்சிருக்கோம் என தெரிவித்தார்.