அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.  அதன் பிறகு துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அந்த கட்சியில் இருந்து கட்சிப்பதிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பிரிந்த இரண்டு அணிகள் இணைந்து  ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் இரண்டு பதவிகளும் கலைக்கப்பட்டு, மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கட்சியிலிருந்து பொதுச் செயலாளர் பதவியில் தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து ஸுதா வேண்டும்  என்று உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் செந்தில் குமார்  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது சசிகலா மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் இன்று தொடங்கின.  சசிகலா தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களில் இருந்து  அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு முக்கிய தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம்,

எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொன்மொழிந்து தான் நான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பொதுக்குழுவுக்கு தன்னை நியமிக்க அதிகாரம் இருக்கும்போது நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது. அதே சமயத்தில் கட்சியில் இடைக்கால ஏற்பாடாக இடைக்கால பொதுச் செயலாளரை பொதுச் செயலாளராக நியமிப்பதற்கும்,  பின்னர் பொதுச்செயலாளராக நியமிப்பதற்கு அதிகாரம் இருக்கின்றது.

கட்சியிலிருந்து தன்னை நீக்குவதற்கும், விதிகளில்  மாற்றம் செய்வதற்கும் பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் இரட்டை பதவிகள் ஒழிக்கப்பட்டு,

பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது விட்டதாகவும்,  அதே சமயத்தில் சசிகலா இந்த உரிமையியல் வழக்கை தொடர்ந்த போது, அவர் உறுப்பினர் பதவியை நீட்டிக்காததால் அவர் உறுப்பினராக இல்லை என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. எனவே இந்த இரண்டு தரப்பு வாதங்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களும் முடியாததால் விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.