கடந்த 31ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாதாரண நகர்மன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் துவங்கும் போதிலே நகரப் பகுதியில் குப்பை எடுக்காதது தொடர்பான வாக்குவாதம் எழுந்தது. குப்பைகள் சரியாக அள்ள வில்லை என்ற புகார் தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் முழக்கம் எழுப்பினர். இந்த  பிரச்சினையை வாக்குவாதமாக மாறியது.

அதிமுக உறுப்பினர்கள் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க அதிகாரிகள் நகர மன்ற  கூட்டத்தில் இல்லை என்று தெரிவித்து முழக்கமிட்டனர். இந்நிலையில் அதுவே சலசலப்பு ஆகி திமுக உறுப்பினர்கள்அங்கிருந்த  நாற்காலி எடுத்து அதிமுக கவுன்சிலை நோக்கி வீசிவிட்டார்கள்.

இந்த பிரச்சனை பெரிதான நிலையில் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக உறுப்பினர் நடவடிக்கை எடுக்க கோரி நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தை அன்றைய தினம் தொடங்கினர். இன்று மூன்றாவது தினம் தொடர்ந்து அதிமுக 8 உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை மேட்டுப்பாளையம்  அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ்,  கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஜி ஆர் ஜி அருண்குமார் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக உறுப்பினர்களின்  கோரிக்கைக்கு நியாயம் வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முதுகை இட்டனர். இதை தடுத்து நிறுத்திய போலீசார், இருவரையும் கைது செய்ததோடு, மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 8 கவுன்சிலர்களையும் குண்டு கட்டாக வெளியேற்றி கைது செய்து தற்போது தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.