கோடநாடு வழக்கில் பத்திரிகையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரி இருக்கிறார்.

கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி டெல்லியில் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் மேத்யூ சாம்வேல் என்பவர் பேசி இருந்தார்.  அவர் எடுக்கக்கூடிய பேட்டியில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கக்கூடிய சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் பேட்டி அழைத்திருந்தார்கள்.  இதனால் தனது பெயருக்கு ஏற்றப்பட்ட கலங்கத்திற்கு ஈடு செய்யும் வகையில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மனா நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு தற்போது நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்த போது,  இந்த வழக்கு மாஸ்டர்  நீதிமன்றத்திற்கு சாட்சிய பதிவுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சாட்சி பதிவாக தான் நீதிமன்றத்துக்கு வந்து சென்றால் ?  செக்யூரிட்டி புரோட்டாகால்  என்று கூறக்கூடிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மீறும் வகையில் அமைந்து விடும்.

அதே போல மற்ற வழக்கறிஞர்களுக்கும் சிரமம் ஏற்படும். எனவே மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து சாட்சி அளிப்பதற்கு பதிலாக தனது வீட்டிலேயே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து சாட்சியை பெறும் வகையில்  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை,  நீதிபதி சதீஷ்குமார் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, இந்த மனு குறித்து மேத்யூ சாமுவேல், மனோஜ்,  சயான் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கு விசாரணை நாளை தள்ளி வைத்திருக்கிறார்