ரயில்களில் பொதுவாக பொருட்களை விற்கும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு விதமான முயற்சிகளை எடுப்பது புதிதல்ல. ஆனால், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், செயற்கை நகைகளை விற்ற இளம் வியாபாரி ஒருவர் தனது கவிதைச் சொற்கள் மற்றும் நையாண்டி நகைச்சுவை கலந்த பேச்சால் பலரது மனதையும் சமூக வலைதளங்களையும் வென்றுள்ளார்.
View this post on Instagram
“தங்கக்காரன் செய்ய மாட்டான், திருடன் திருட மாட்டான், தங்கத்தை விடக் குறையாது… தொலைச்சாலும் வெட்கமில்லை!” என கூறிய அவர், 50 ரூபாய்க்கு வாங்க மாட்டேன் எனச் சொன்ன பயணியிடம், “50 ரூபாய்க்கு இதைக் கொடுக்க மாட்டேன், உன்னோட மனசைக் கொடு!” என நையாண்டியாக பதில் அளித்து சிரிப்பு வெடிக்க வைத்தார்.
மேலும், “காதலில் தான் ஏமாற்றம் வரும், என் பொருளில் அல்ல!” எனத் தன் நகையை உயர்த்திப் பேசினார். இந்த வீடியோ, @liveforfood007 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. தற்போது இது 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று, லைக்ஸ் மற்றும் கமெண்ட்களால் சஞ்சலத்தை ஏற்படுத்தி வருகிறது.
