இந்தியாவின் சுவை மிகுந்த ஸ்நாக்ஸ்களான, சமோசா முதல் ஜிலேபி வரை, உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல், இப்போது உலக அளவில் வெளிநாட்டு மக்களையும் ஈர்த்துள்ளது.
View this post on Instagram
தற்போது, ஒரு கொலம்பிய பெண் இந்தியாவின் பிரபலமான ஸ்நாக் ‘குர்குரே’யை முதன்முறையாக சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
வீடியோவில், அந்த பெண் முதலில் குர்குரே பாக்கெட்டை பார்த்து, அதில் என்ன எழுதி இருக்கிறது என்று முயற்சி செய்து வாசிக்கிறார். பிறகு, “இதுவரை இதைப் பண்ணி பாக்கல” என்று புன்னகையுடன் கூறி, பாக்கெட்டை திறந்து ஒரு குர்குரே எடுத்துச் சாப்பிடுகிறாள். மசாலா மற்றும் கார சுவை அதிகமாக இருந்தாலும், தனக்குப் பிடித்து விட்டதாகத் தெரிவிக்கிறார்.
மேலும், “இது கொலம்பியா மக்களுக்குப் பிடிக்கும்!” என உருக்கமாகக் கூறுகிறார். இந்த வீடியோ, @veggmomo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது 65,000 பார்வைகளையும், 2,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
ஒருவர் கமெண்டில், “இப்போ ஒரு காபி, டீயுடன் குர்குரே குடித்தால் தான் உண்மையான கிக் வரும்!” எனக் கூறியிருந்தார், இன்னொருவர், “ஒரு பாக்கெட் சாப்பிட்டா போதும், நாளைக்கு புதிய பாக்கெட் தேவை!” என நையாண்டியாக எழுதியுள்ளார்.
