நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியக் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலம் குறித்து கவலை தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சமூக வலைதளங்களின் அதீதப் பயன்பாட்டால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதுடன், அவர்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
எதிர்காலத் தூண்களான குழந்தைகள் இப்படி டிஜிட்டல் போதைக்கு அடிமையாவது நாட்டின் மனிதவளத்தையும், பொருளாதாரத்தையும் நீண்ட காலத்தில் பாதிக்கும் என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்களில் மூழ்கிக் கிடப்பதால், மாணவர்களின் கவனிப்புத் திறன் குறைந்து கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
