தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை, தேர்தல் களத்தில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் ஒரு நடிகருக்குப் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது வேறு, அந்த ரசிகர்களைத் தேர்தல் நேரத்தில் வாக்குகளாக மாற்றுவது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம் என்று அவர் நச் என்று கூறியுள்ளார். விஜய்யின் மக்கள் செல்வாக்கை அரசியல் பலமாக மாற்ற முடியாது என்ற தொனியில் அவர் பேசியிருப்பது, தவெக தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

​மேலும், விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “யாரோ எதையே சொல்லிவிட்டுப் போகிறார்கள், எங்களுக்கும் அவருக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது” என்று அவர் கறாராகக் கூறி, கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.