மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்தச் சிறுமியை, யாரும் இல்லாத ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று அந்த ஆசிரியர் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளார். மாலையில் வீடு திரும்பிய அந்தச் சிறுமி, அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் ஆசிரியர் செய்த கொடுமையைக் கூற, அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பலேரா போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த ஆசிரியரை உடனடியாகக் கைது செய்தனர். ஆசிரியர் என்ற பெயரில் ஒரு பிஞ்சு குழந்தைக்குத் தீங்கிழைத்த அந்த நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியரே காமவெறி பிடித்து இப்படி நடந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
