குடியரசு தின விழாவில் பள்ளி மாணவியான தன் மகளின் கலை நிகழ்ச்சியை, ஒரு தந்தை தன்னிடம் இருந்த சாதாரண பட்டன் போனில் மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் நவீன கேமராக்களுக்கு மத்தியில், தன்னிடம் இருக்கும் எளிய வசதியைக் கொண்டு மகளின் முன்னேற்றத்தைக் கொண்டாட துடிக்கும் அந்த தந்தையின் தூய்மையான அன்பு, சமூக வலைதளவாசிகளின் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது.
மேலும் வசதிகளைத் தாண்டி ஒரு தந்தையின் பாசமும் பெருமிதமும் அந்தப் பதிவில் வெளிப்படுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த அன்பிற்கு கருவிகள் முக்கியமல்ல, உணர்வுகளே முக்கியம்” எனப் பதிவிட்டு இணையவாசிகள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் மகளின் ஒவ்வொரு சிறிய வெற்றியையும் பொக்கிஷமாகக் கருதும் அந்தத் தந்தையின் செயல், உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. வைரலாகி வரும் இந்த நெகிழ்ச்சியான காட்சி, குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தந்தையர் பாசத்திற்குச் சான்றாக அமைந்து இணைய இதயங்களை வென்றுள்ளது.
