ஹிமாச்சலப் பிரதேசத்தின் குறுகலான மலைப்பாதையில் அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றை வழிவிடாமல் தடுத்த ஓட்டுநரின் வீடியோ தற்பொழுது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிர்காக்கும் அவசரத்தில் சைரன் ஒலியுடன் பின்னால் வந்த ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல், முன்னே சென்ற கார் ஓட்டுநர் தவறான பக்கத்தில் தொடர்ந்து வாகனம் ஓட்டியதுடன், நீண்ட நேரமாக வழியை மறித்துக் கொண்டிருந்தார்.
மேலும் மலைப்பாதையின் கடினமான சூழலில் ஒரு நிமிடம் கூட நோயாளிக்கு மிக முக்கியமானது என்பதை உணராமல் செய்யப்பட்ட இந்த அலட்சியமான செயல், அஉயிருக்குப் போராடிய நோயாளிங்குள்ள மற்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
When every second counts, we still have such idiots blocking the road. @himachalpolice @TTRHimachal here is the video evidence. Please do the needful. And the vehicle with a GOI sticker should be fined more for disrupting traffic despite being a government vehicle. pic.twitter.com/eBh4uoqhvq
— Nikhil saini (@iNikhilsaini) January 27, 2026
“>
இதனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். “மனிதாபிமானமற்ற இத்தகைய செயல்கள் ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடும்” எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறுவது மட்டுமின்றி, அவசர கால ஊர்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கத்தையும் அந்த ஓட்டுநர் மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், மலைப்பகுதி சாலைகளில் போக்குவரத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
