நெஞ்சை பதறவைக்கும் இந்தச் சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது, அங்கிருந்த சாலை உருளை எதிர்பாராதவிதமாக ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது.

இதனால் கவனக்குறைவாக இயக்கப்பட்ட அந்த ராட்சத வாகனத்தின் அடியில் சிக்கிய முதியவரைக் காப்பாற்ற எவருக்கும் அவகாசம் கிடைக்கவில்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்களது வேதனையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Fear Bunker (@fearbunker)

“>

மேலும் “இதயமே வெடித்துவிடும் போல இருக்கிறது” என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பொது இடங்களில் கனரக வாகனங்களை இயக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது இயந்திரக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.