கடந்த ஆண்டு DigiLocker பயன்பாட்டை மேலும் எளிதாக்க வாட்ஸ்அப் சாட்பாக்ஸ்(chat box) வசதியை அரசு கொண்டுவந்தது. இதன் வாயிலாக DigiLockerல் உள்ள தரவுகளை  வாட்ஸ்அப் வாயிலாக நொடிகளில் பெற்று விடலாம். அதற்கு முன்னால் நீங்கள் DigiLockerல் பதிவு செய்யவேண்டும். https://www.digilocker.gov.in/எனும் இணையதளத்தில் எளிதாக உங்கள் கணக்கை துவங்கலாம். உங்களது பெயர், பிறந்ததேதி, ஆதார் எண், தொலைபேசி எண், மெயில் ஐடி, உங்கள் விருப்ப 6 இலக்க பின் போட்டால் போதும் DigiLocker கணக்கு தயாராகி விடும்.

பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வாகனப்பதிவு சான்றிதழ் (RC), இருசக்கர வாகன காப்பீட்டுக் கொள்கை ஆவணம், உங்களது காப்பீட்டுக் கொள்கை ஆவணம் என அனைத்தையும் Digi Lockerல் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப்-ல் பெறுவது எப்படி?

முதலாவதாக உங்களது தொலைபேசியில் +91 9013151515  என்ற எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள். இவை DigiLocker வாட்ஸ் ஆப் சேவை எண் ஆகும். அதன்பின் வாட்ஸ்அப்-ல் DigiLocker உதவி சாட் பாக்ஸிற்கு “ஹாய்” என்று செய்தி அனுப்ப வேண்டும். அப்போது சேவைக்குரிய தேர்வுகளையும் கேட்கும். அவற்றில் DigiLocker service என்பதை தேர்வு செய்தால் ஏற்கனவே “DigiLocker கணக்கு வைத்திருக்கிருக்கிறீர்களா?” என கேட்கும். ஆம் என்பதை தேர்வு செய்ததும், 12 இலக்க ஆதார் எண்ணை  பதிவுசெய்ய சொல்லும்.

அவ்வாறு பதிவுசெய்ததும் ஆதார் எண்ணுடன் இணைத்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டால் உங்களது DigiLocker-க்கான வாட்ஸ்அப் சேவை தொடங்கிவிடும். பின் DigiLockerஇல் நீங்கள் வைத்துள்ள அனைத்து டாக்குமென்டுகளும் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். அதில் வேண்டியதை குறிப்பிட்டால் நொடிகளில் pdf பைலாக உங்களது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை ஆதார்எண் பதிவிட்டு பதிவு செய்து கொண்டால் போதும் அடுத்து தேவைப்படும் போதெல்லாம் “hi”என அனுப்பினால் உங்களது தரவுகளின் பட்டியல் கிடைத்து விடும். ஆகவே இனி அனைத்து ஆவணங்களையும் நொடிகளில் எடுத்து காட்டிவிடலாம்.