உலகில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தக்கூடிய WhatsApp-ல் மெட்டா நிறுவனமானது புது அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதன்படி இப்போது யூசர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனமானது வாட்ஸ்அப் கால் செய்யும் அனுபவத்தினை மேலும் ஈஸியாக்க புது ஷார்ட்கட் ஆப்சனை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இனிமேல் வாட்ஸ்அப் கால் செய்வதற்கு WhatsApp செயலியை திறக்கவேண்டிய அவசியமில்லை. நாம் அடிக்கடி சாட் செய்யும் (அ) கால் செய்யும் தொடர்பு எண்ணை வாட்ஸ்அப்-ல் டேப் செய்தவுடன், காலிங் ஷார்ட் கட் ஆப்சனில் இணைக்கவா என்ற பாப் அப் மெனு தோன்றும்.

அப்போது நாம் அனுமதி கொடுத்துவிட்டால் ஸ்கிரீனில் அதற்குரிய தேர்வு வந்துவிடும். அதன்பின் வாட்ஸ்அப் கால் செய்வதற்கு நாம் WhatsApp -ஐ திறக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ஆப்சன் வாயிலாக ஈஸியாக வாட்ஸ்அப் கால் செய்யும் வசதி நமக்கு கிடைக்கும். இப்போது இந்த வசதி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் பயன்படுத்தி நிறை குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தபின் பொதுப்பயனர்களுக்கு இவ்வசதி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.