இன்றைய டிஜிட்டல் உலகில் தினமும் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகின்றன. ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதை விட்டு நீங்காமல், பழைய நினைவுகளைத் தூண்டும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோதான் தற்போது எக்ஸ் தளத்தில் ‘புயலைக்’ கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு சிறுவன் கேமிங் சென்டர் ஒன்றில் அமர்ந்து மிகத் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது பின்னாலிருந்து திடீரென வரும் ஒரு நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தச் சிறுவனுக்குத் தர்ம அடி கொடுக்கத் தொடங்குகிறார். முதலில் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது, அடுத்த நொடியே கையில் இருந்த செருப்பால் அந்த நபரைத் துவைத்து எடுக்கிறார்.
Kalesh b/w Father and Son, Father Caught his Son stole money from his packet and went to Play games in Cafe😭 pic.twitter.com/ooSL0PTqnM
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 14, 2026
விசாரித்துப் பார்த்ததில், அந்தச் சிறுவன் தனது தந்தையின் பாக்கெட்டிலிருந்து திருட்டுத்தனமாகப் பணத்தை எடுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் கேம் விளையாடச் சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட தந்தை, தேடி வந்து அந்த இடத்திலேயே மகனுக்குச் சரியான பாடம் புகட்டியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதைப் பார்த்தால் எனது சிறுவயது நினைவுகள் வருகின்றன”, “சரியான தண்டனை, இப்போதுள்ள பிள்ளைகளுக்கு இது தேவைதான்” எனப் பலவாறாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ‘பாப்பா ஆஃப் தி மன்த்’ எனப் பலரும் இந்தத் தந்தையின் துரித நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர்.
